ஏற்றுமதி வர்த்தக நோக்கில் பழ செய்கை

ஏற்றுமதி வர்த்தக நோக்கில் பழ செய்கை

ஏற்றுமதி வர்த்தக நோக்கில் பழ செய்கையை மேம்படுத்த விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

கண்டி மாவட்டத்தில் நாவலபிட்டி, கம்பளை, உடுநுவர மற்றும் ஹேவாஹெட்ட ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, 2000 குடும்பங்களுக்காக 700 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் நிதி அனுசரணையின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.