வழமைக்கு திரும்பிய தொடரூந்து சேவை...!

வழமைக்கு திரும்பிய தொடரூந்து சேவை...!

தீபரவல் காரணமாக  பதுளை முதல்  கொழும்பு வரையிலான தொடரூந்து போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது பிராந்திய செய்தியாளர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன வன பகுதியில் இன்று காலை தீபரவியுள்ளதன் காரணமாக தொடரூந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது

இதன் காரணமாக இன்று காலை பதுளை தொடக்கம் கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொடரூந்து தீ பரவல் காரணமாக இதல்கஸ்ஹின்ன தொடருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பயணத்தினை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.