உறவினர்களால் உரிமை கோரப்படாத சரீரங்களை உடனடியாக தகனம் செய்ய நடவடிக்கை

உறவினர்களால் உரிமை கோரப்படாத சரீரங்களை உடனடியாக தகனம் செய்ய நடவடிக்கை

கொவிட் நோயால் மரணித்து உறவினர்களால் உரிமை கோரப்படாத சரீரங்களை உடனடியாக தகனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் முன்வைத்த கோரிக்கை ஒன்றை ஆராய்ந்த சட்டமா அதிபர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

கொவிட் 19 நோயினால் மரணித்து உறவினர்களால் பொறுப்பேற்கப்படாத சுமார் 19 சடலங்கள் நாட்டின் பல வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.<br /><br />இதன்படி, இலங்கையின் அரசியலமைப்பில் தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைவாக, உரிமைக்கோரப்படாதுள்ள சடலங்களை தகனம் செய்ய முடியும் என, சட்ட மாதிபர் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, லிந்துலை பொதுசுகாதார காரியாலய பகுதிக்குற்பட்ட எல்பியன் - தோன்பீல்ட் தோட்டத்தில் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து அந்த பகுதியில் பொது மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

கடந்த 28 ஆம் தொற்றுறுதியானவரின் வீட்டில் இடம்பெற்ற உத்திரகிரியை நிகழ்விற்கு தோன்பீல்ட் தோட்டத்திலுள்ள அதிகளவானோர் கலந்து கொண்டுள்ளமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அந்த தோட்டத்தில் உள்ள அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த உத்திரகிரியை நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அவிசாவளை பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

54 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவருக்கே இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை, 300 பேருக்கான பி.சி.ஆர்.முடிவுகள் இன்று வெளியாகவுள்ளதாக யாழ்ப்பாண போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்

அதேநேரம் நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து மேலும் 542 பேர் குணமடைந்துள்ளனர்.

தொற்று நோய் தடுப்பு பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 800 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதேவேளை, நாட்டில் மேலும் 316 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடைய 316 பேருக்கும், சிறைச்சாலை கொத்தணியில் 43 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுதியானவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது.

7 ஆயிரத்து 795 கொவிட் 19 நோயாளர்கள் தொடர்;ந்தும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்