11 பேரின் சடலங்களுக்கான உடற்கூற்று பரிசோதனைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு உத்தரவு
மஹர சிறைச்சாலை மோதலில் மரணித்த 11 பேரின் சடலங்களுக்கான உடற்கூற்று பரிசோதனைகளை விரைவாக மேற்கொண்டு அதன் அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு வத்தளை நீதவான் புத்திக ஸ்ரீ ராகல உத்தரவிட்டுள்ளார்.
அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஐவர் அடங்கிய நிபுணர் குழுவிற்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
இதுவரை ராகம போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள குறித்த சரீரங்களை காவல்துறை பாதுகாப்பு மற்றும் கொரோனா சுகாதார வழிகாட்டிகளை பின்பற்றி ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகள் குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரை அந்த சரீரங்களை தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்பது தொடர்பான தீர்ப்பொன்றை வழங்க முடியாதுள்ளதாக மஹர நீதவான் தெரிவித்துள்ளார்