காணாமல் போன துறவியைத் தேடிய பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
காணாமல் போன துறவி காலி - ரத்கமாவிலுள்ள களப்பிலிருந்து சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளதாகப் ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
டச்சு நாட்டிலிருந்து வருகை தந்த 59 வயதுடைய துறவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக நேற்று பிற்பகல் ரத்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந் நிலையில் காணாமல்போன துறவி உயிரிழந்த நிலையில் ரத்கம பகுதியில் அமைந்துள்ள களப்பொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து காலி நீதிவான் மரணம் குறித்த விசாரணையை நடத்தியதுடன், சடலம் கரபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.