கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பில் அதிகளவானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! விபரம் வெளியானது

கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பில் அதிகளவானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! விபரம் வெளியானது

கடந்த 24 மணித்தியாலங்களில் 520 கொரோனா தொற்றாளிகள் கொழும்பு பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ளனர்.

அதிகாரப்பூர்வ தகவலின்படி 526 கொரோனா தொற்றாளிகள் கொழும்பு பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ளனர். நேற்று மாத்திரம் இலங்கைக்குள் கண்டறியப்பட்ட தொற்றாளிகளின் எண்ணிக்கை 797 ஆக இருந்தது. இதில் 526 பேர் கொழும்பு பிரதேசத்திலும் கம்பஹாவில் 97 பேரும் களுத்துறையில் 53 பேரும் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டு இருக்கின்றனர்.

கொழும்பு பிரதேசத்தை பொறுத்தவரையில் பொரல்லையில் 176 பேர் தொற்றொளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். 89 பேர் மட்டக்குளியவிலும், 85 பேர் கொம்பனித் தெருவிலும், 74 பேர்

மருதானையிலும், 54 பேர் வௌ்ளவத்தையிலும் தொற்றளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.

13 பேர் கொழும்பு கோட்டையிலும் 11 பேர் கொள்ளுப்பிட்டியவிலும் 10 பேர் தெமட்டகொடயிலும், 4 பேர் கிருலப்பனையிலும் கொட்டாஞ்சேனை, அங்கொட, ஹோமகம, மொரட்டுவ, கல்கிசை, நுகேகொடை,பாதுக்க. பன்னிப்பிட்டிய, இரத்மலானை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய இடங்களில் தலா ஒருவரும் கொரோனா தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர்.

கம்பஹா பிரதேசத்தை பொறுத்தவரையில் அதிகபட்ச தொற்றாளிகள் அங்கு மஹர என்ற இடத்தில் கண்டறியப்பட்டு உள்ளார்கள். 55 தொற்றாளிகள் அங்கு கண்டறியப்பட்டுள்ளனர்.

களனி பகுதியில் 8 தொற்றாளிகள் கண்டறியப்பட்டார்கள்.கட்டான மற்றும் வத்தளை பகுதியில் தலா 6 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டனர்.

நீர்கொழும்பில் 4 தொற்றாளிகலும் பேலியகொடவில் 4 தொற்றாளிகலும் கம்பஹாவில் 3 தொற்றாளிகலும் கொச்சிக்கடை ,மினுவாங்கொட நிட்டம்புவ மற்றும் வியாங்கொடை ஆகிய இடங்களில் தலா இரண்டு தொற்றாளிகலும் தெல்கொட, மீறிகம மற்றும் வௌிவேறியா ஆகிய இடங்களில் தலா ஒரு தொற்றாளியும் கண்டறியப்பட்டுள்ளனர்.