கொரோனா விதிமுறைகளை மீறிய வழக்கைத் தவிர்த்து வந்த நபர் கைது...!
முதலாவது கொரோனா அலையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியோர் தொடர்பில் ரத்கம காவல் துறையினரால் தாக்கல்செய்யப்பட்ட வழக்கொன்றிற்கமைய நீதிமன்றத்தை தவிர்த்து வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்பிட்டி - தெலிக்கடை எனும் பிரதேசத்தில் வைத்தே மேற்படி நபர் கைதாகியுள்ளார்.
நேற்று கைது செய்யப்பட்ட 29 வயதுடைய குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என காவல் துறையினர் தொிவிக்கின்றனர்.
சந்தேக நபர் இன்று பத்தேகம நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026