சமூக ஆரோக்கியம் பற்றி ஆராய 40 நாடுகளின் நிபுணர்கள் கொழும்புக்கு
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பிராந்திய மாநாடு நேற்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் நாற்பது ஆசிய பசுபிக் வலயத்தைச் சேர்ந்த நாடுகளின் நிபுணர்கள் பங்குபற்றினர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய சமூக நிலைப்பாட்டுக்கு அமைய சமூக ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் அதற்கமைய பின்பற்றப்படவேண்டிய புதிய விதிமுறைகள் தொடர்பில் ஆராய்வதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என இலங்கை மருத்துவ சபை தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் பேராசிரியர் விசேட மருத்துவர் இந்திக கருணாத்திலக தெரிவிக்கையில்-சமூக ஆரோக்கியம் தொடர்பில் ஆசிய வலயத்தின் சமூக ஆய்வு மையத்துடன் இணைந்தே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது- என்றார்.