நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!
நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்றைய தினம் 798 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதற்கு அமைய இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அவர்களில் பேலியகொடை தொத்தணியுடன் தொடர்புடைய 567 பேரும், சிறைச்சாலை கொத்தணியில் 230 பேரும் அடங்குவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
ஒருவர் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது.
7 ஆயிரத்து 978 கொவிட் 19 நோயாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம் நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.
நேற்றைய தினம் மேலும் 454 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியதற்கு அமைய இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளது.