நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.

இன்றைய தினம் மேலும் 454 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியதற்கு அமைய இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 258 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம் 7 ஆயிரத்து 180 கொவிட் 19 நோயாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கினிகத்தேனை பிளக்வோட்டர் மேற்பிரிவு மற்றும் கீழ்பிரிவு ஆகிய பகுதிகளில் பொது மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அதிகாரி; காரியாலயத்தின் பதில் மேற்பார்வை அதிகாரி எஸ்.காமதேவன் இதனைத் தரிவித்துள்ளார்.

அந்த பகுதியில் இதுவரை 33 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 106 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது

அதேநேரம் இன்றைய தினம் 510 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது கொட்டகலை, பொகவந்தலாவை, லிந்துலை சேர்ந்த 4 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அதிகாரி; காரியாலயத்தின் பதில் மேற்பார்வை அதிகாரி எஸ்.காமதேவன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நோர்வுட் தமிழ் மகாவித்தியாலயத்தில் தொற்றுதியான ஆசிரியையோடு நெருங்கிய தொடர்பினை பேணியவர்களுக்கு இன்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி முதற்கட்டமாக அந்த பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசார பணியாளர்களுக்கு இன்று பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்தநிலையில் பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகள் கிடைக்கப்பெற்ற பின்னரே பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கேகாலை பகுதியை சேர்ந்த சுதேச மருத்துவர் ஒருவரால் கொரோனா வைரசிற்கு எதிரான தேசிய ஒளடதம் ஒன்றை பொது மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் நடவடிக்கை ஒன்று இன்று உடுகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சமூக இடைவெளியை பேணாது அந்த ஒளடதத்தை பெற்றுக்கொள்வதற்காக பொது மக்கள் கூடியதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்;.

இதேவேளை, கொவிட் 19 தொற்று ஏற்பட்டவர்கள் அதனை மறைப்பதற்கு முயற்சிப்பதாகவும் அந்த நிலைமையை தவிர்ப்பதற்காக மூலோபாய திட்டம் ஒன்று அவசியம் என ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்றுநோயியல் மற்றும் கொவிட் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான இராஜாங்க சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பிலான பகுப்பாய்வு குழு இன்று சுகாதார அமைச்சில் கூடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் பி.சீ.ஆர் பரிசோதனைகளை அதிகரிப்பது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கொவிட் 19 நோயாளர்கள் கண்டறியப்படும் பகுதிகளில் காணப்படும் நோயாளர் காவு வண்டிகளின் பற்றாக்குறை தொடர்பலும் இதன்போது அதவானம் செலுத்தப்பட்டுள்ளது.