பெருந்தோட்டங்களிலும் நோயாளர் கொத்தணி உருவாகும் அபாயம்

பெருந்தோட்டங்களிலும் நோயாளர் கொத்தணி உருவாகும் அபாயம்

மத்திய கொழும்பில் சில பிரதேசங்களில் ஏற்பட்டதை போன்று பெருந்தோட்டங்களிலும் நோயாளர் கொத்தணி உருவாகும் அபாய நிலை இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி, நோயாளர்களை அடையாளம் காணும் செயற்பாடுகளை உச்சபட்ச அளவில் செயற்படுத்த வேண்டும் என்றும் அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் வைத்திய ஹரித அலுத்கே இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

இதேநேரத்தில், கொழும்பு நகரசபை எல்லைப்பகுதியில் நோயாளர்கள் அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேலும் விரிவுபடுத்தி உள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.