தீயில் எரிந்து குடும்ப பெண் உயிரிழப்பு
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சேமமடு பகுதியில் தீயில் எரிந்து படுகாயமடைந்த பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த செல்வரஞ்சனி (41) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இவரது வீட்டில் தீ எரிவதை அவதானித்த அயலவர்கள் விபத்தில் சிக்கிய இவரை, மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினர்.
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணம் தொடர்பாக ஓமந்தை பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.