கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அதனை மறைப்பதற்கு முயற்சிக்கிறார்கள் - சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அதனை மறைப்பதற்கு முயற்சிக்கிறார்கள் - சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே

கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அதனை மறைப்பதற்கு முயற்சிப்பதாகவும் அதனைத் தவிர்க்கும் பொருட்டு அதற்கான மாற்றுத் திட்டமொன்று தேவைப்படுவதாகவும் தொற்று நோய்கள் மற்றும் கொரோனா நோய்த் தொடர்பான விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தொிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான பகுப்பாய்வுக் குழுக் கூட்டம் இன்று (08) சுகாதார அமைச்சில் கூடியது. இதில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தொிவித்தார்.

இதற்கு மேலதிகமாக நாள்தோறும் இடம்பெறுகிறன்ற பீ.சீ.ஆர். பாிசோதனையை அதிகாிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்படும் பகுதிகளில் ஏற்பட்டுள்ள நோயாளர் காவு வண்டி பற்றாக்குறைத் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.