அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் ஔடதங்கள் விநியோகிப்பதற்கான புதிய திட்டம்
அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் வழிகாட்டலின்போில் ஔடதங்கள் விநியோகிப்பதற்கான புதிய திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பிரதேச வாாியாக நியமிக்கப்பட்டுள்ள முகவர்கள் மூலம் நோயாளர்களுக்கான ஔடதங்கள் வட்ஸ்அப் செய்வதன் மூலம் பெற்றுற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை விடயத்திற்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சர் பேராசிாியர் சன்ன ஜயசுமனவின் தலைமையில் நடைபெற்றதோடு இதில் குறித்த முகவர்களுக்கு விலைக்கழிவும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது நாட்டில் 45 அரச மருந்தகங்கள் நடைமுறையிலுள்ளதோடு வரும் நாட்களில் நகரங்கள் தோறும் அரச மருந்தகங்களை நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் தொிவித்துள்ளார்.