நிர்க்கதிக்குள்ளாகிய இலங்கையர்களை அழைத்துவர இந்தியா பூரண ஒத்துழைப்பு

நிர்க்கதிக்குள்ளாகிய இலங்கையர்களை அழைத்துவர இந்தியா பூரண ஒத்துழைப்பு

தென்னிந்தியாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர இந்தியா பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே உறுதியளித்துள்ளார்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையேயான சந்திப்பொன்று (07) வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டபோதே அவர் இதனைத் தொிவித்தார்.