இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..!
தமிழகம் - புதுக்கோட்டையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக முயற்சிக்கப்பட்ட 1.26 லட்சம் இந்திய ரூபாய் மதிப்புள்ள மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
புதுக்கோட்டை மாவட்டம், கோபாலபட்டினம் கிராமத்தில் நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதன்போது, இலங்கைக்குக் கடத்துவதற்காக வைக்கப்பட்டிந்த நிலையில், சுமார் 630 கிலோ எடையுள்ள மஞ்சளை, காவல்துறை பறிமுதல் செய்துள்ளது
சம்பவம் தொடர்பாக 5 பேரிடம் காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.