காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் திறக்கப்பட்டது..!

காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் திறக்கப்பட்டது..!

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் விசாலமான முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் இன்று முற்பகல் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் நடுகுடாவில் இந்த மின்னுற்பத்தி மையம் அமைந்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி வழங்கலில், 141 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்த காற்றாலை மின்னுற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக தேசிய மின்சார கட்டமைப்புக்கு 103 மொகாவோட் இணைக்கப்படவுள்ளது.

இதன்படி குறித்த காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் ஊடாக ஒரு அலகு மின்சாரத்திற்காக எட்டு முதல் 9 ரூபா வரையிலான குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.