காலி கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..!

காலி கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்..!

காலி கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 11 ஆம் திகதி வரை காலி கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமையை அடுத்து நேற்று முதல் அமுலாகும் வகையில் 3 தினங்களுக்கு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் காலி மாவட்டத்தின் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு எதிர்வரும் 11 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.