கொரோனாவை ஒழிக்கும் ஔடதங்களை பெற்றுக்கொள்ள குவிந்த மக்கள்..!
சுதேச வைத்தியர் தம்மிக்க பண்டாரவினால் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசை ஒழிப்பதற்கான ஔடதங்களை பெற்றுக்கொள்ள அதிகமானோர் வருகை தந்துள்ளனர்
கேகாலை ஹெட்டிமுல்ல உமுாகம பகுதியில் 15,000 இற்கும் அதிகமானோர் குறித்த மருந்துகளை கொள்வனவு செய்ய வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்பட்ட நிலையில் மக்கள் ஒன்று திரண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல் துறை உத்தியோகத்தர்கள் 120 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.