திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி!

திருகோணமலையில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி!

திருகோணமலை   கண்டி பிரதான வீதியில் நம்பலகமுவ பிரதேசத்தில் சீமெந்து மூடைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றுடன் முச்சக்கரவண்டியொன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் பலியாகியுள்ளனர்.

நேற்றிரவு இடம்பெற்ற இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரே இவ்வாறு பலியாகியுள்ளதோடு இவர்கள் சிலாபம் மற்றும் திருகோணமலைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

இவ்விபத்தை மேற்கொண்ட லொறியின் சாரதி காவற்றுறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.