குடிமக்களுக்கு சோகமான செய்தி -மேலதிகமாக வசூலிக்கப்படவுள்ள கட்டணம்

குடிமக்களுக்கு சோகமான செய்தி -மேலதிகமாக வசூலிக்கப்படவுள்ள கட்டணம்

கால் போத்தல்கள் (185 மிலி) மதுபானம் வாங்கும் போது ஐந்து முதல் 10 ரூபாய் வரை வைப்புத் தொகையாக வசூலிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் கலால் திணைக்கள பிரதிநிதிகள் இடையே நடந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

"இந்த முடிவை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், கால் போத்தல்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்" என்று அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

" அதிக சுற்றுச்சூழல் சேதத்தை இந்த போத்தல்கள் ஏற்படுத்துவதால் பயன்பாட்டை தடை செய்ய திட்டமிடப்பட்டிருந்தாலும், உற்பத்தியாளர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது," என்று அமைச்சகம் மேலும் கூறியது.

தற்போது ஆண்டு உற்பத்தி சுமார் 120 மில்லியன் போத்தல்களில், 18-20 மில்லியன் போத்தல்கள் மதுபானத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுமார் 60 சதவீதம் மறுசுழற்சி செய்ய முடியாதவை எனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.