கட்டுநாயக்க விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் ஜனவரியில் திறப்பு

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து மூடப்பட்ட கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் சுற்றுலாப்பயணிகளுக்காக திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சுகாதாரத் துறையின் அனுமதியுடன், விமான நிலையத்தை எந்த திகதியில் திறப்பது என்பது தொடர்பாக அதிகாரிகள் கலந்துரையாடலை நடத்தவுள்ளனர்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்த தொடர் வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்படுகின்றன.