பீ சீ ஆர் மற்றும் ரெபிட் என்டிஜன் பரிசோதனைகளை செய்தவர்களை இனம் காண புதிய செயலி அறிமுகம்..!
தொற்று ஏற்பட்டவர்களை அடையாளங்காணப்பதற்காக மேற்கொள்ளப்படும் பி.சீ.ஆர் பரிசோதனை மற்றும் ரெபிட் என்டிஜன் பரிசோதனைக்காக உட்படுத்தப்படுபவர்களை பதிவு செய்வதற்காக புதிய கையடக்க தொலை செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதி சுகாதர சேவைகள் பணிப்பாளர், மருத்துவ நிபுணர் சமன்ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தரவுகளை சிறந்த முறையில் சேகரிப்பதற்காக இந்த செயலி உதவக்கூடும்.
>இதன் மூலம் சேகரிக்கப்படும் தரவுகளை ஆய்வு கூட கட்டமைப்பு, தொற்று நோய் விஞ்ஞான பிரிவு, சுகாதார அமைச்சு மற்றும் அந்தந்த பகுதிகளில் உள்ள தொற்று நோய் விசேட நிபுணர்கள் துரிதமாக பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த கையடக்க தொலைபேசி செயலியை அடுத்த வாரம் முதல் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதர சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.