திருப்பியனுப்பப்பட்ட வர்த்தகர்கள்...!
தர்கா நகர் மற்றும் அலுத்கம ஆகிய பகுதிகளில் வாராந்த அங்காடி வர்த்தக நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன
தர்கா நகர் மற்றும் அலுத்கம ஆகிய பகுதிகளில் ஒவ்வொரு திங்கள் கிழமைகளிலும் அங்காடி வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறுவது வழமையாகும்.
இந்நிலையில் வர்த்தகர்கள் இன்றைய தினமும் தங்களது வர்த்தக நடவடிக்கைகளுக்காக வருகை தந்திருந்தனர்
குறித்த பகுதிகளில் கொரோனா பரவல் நிலையானது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படாமையினால் வர்த்தகர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.