கொழும்பிலிருந்து நாவலபிட்டிக்கு சென்றவருக்கு கொரோனா..!
நாவலப்பிட்டி - கெட்டபுலா மத்திய பிரிவு தோட்டத்தை சேர்ந்த யுவதி ஒருவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
கொழும்பு, கிருலப்பனை பகுதியில் பணிப்புரிந்த குறித்த யுவதி கடந்த 25 ஆம் திகதி தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் போது அவருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிதாக 5 கொரோனா நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டதை அடுத்து அவிசாவளை சீதாவாக்கை ஏற்றுமதி தயாரிப்பு வலயத்தில் பதிவாகியுள்ள தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.
அவிசாவளை பொது சுகாதார பரிசோதகர் இதனைத் தெரிவித்துள்ளார்.