சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதோடு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களையும் அழைத்து வரத் திட்டம்

சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதோடு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களையும் அழைத்து வரத் திட்டம்

சுகாதார விதிமுறைகளுக்கமைய எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டிற்கு வரவழைப்பதோடு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை இந்நாட்டிற்கு அழைத்து வருவதை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிக்கின்றது.

மார்ச் 10ம் திகதி முதல் கடந்த நவம்பர் 30ம் திகதி வரை வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் 45,509 பேர் இந்நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளதோடு மேலும் 58,892 பேர் நாட்டிற்கு வருவதற்கான எதிர்பார்ப்புடன் வெளிநாட்டுத் தூதரகங்களில் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக அவ்வமைச்சுக்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.

எமது நாட்டிற்கு அழைத்துவரப்பட்டவர்களில் 30,000 இற்கும் மேற்பட்டோர் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கைத் தொழிலாளர்கள் என்பதையும் அவ்வமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.