எம்பிலிபிட்டியில் கோர விபத்து - 18 வயது இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!

எம்பிலிபிட்டியில் கோர விபத்து - 18 வயது இளைஞர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!

எம்பிலிபிட்டி - இரத்தினபுரி 100 ஆவது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

உந்துருளி ஒன்று பாரவூர்தியுடன் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

18 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.