
குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் 20 பேருக்கு கொரோனா (காணொளி)
மினுவாங்கொடை தொழிற்சாலையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரிகள் 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரால் சரத் வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிலையியல் கட்டளைச் சட்டத்தில் 23, மற்றும் 22 ஆம் பிரிவுகளின் அடிப்படையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய சுற்றுச் சூழல் மற்றும் வனவிலங்கு அமைச்சுகளின் செலவுகள் குறித்து தற்போது விவாதங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.