
வன ஜீவராசிகள் உத்தியோத்தர்களின் சேவைப் புறக்கணிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்பு..!
வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் காரணமாக கிராமங்களுக்குள் பிரவேசிக்கும் யானைகளை மீண்டும் வனப்பகுதிகளுக்குள் விரட்டும் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் யால சரணாலயத்திற்குள் எந்தவொரு சுற்றுலா பயணிக்கும் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன ஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க வன ஜீவராசிகள் உத்தியோகத்தர்களை நிந்தித்தமைக்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.