மஹர சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன..!

மஹர சிறைச்சாலையில் உயிரிழந்தவர்களில் 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன..!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் மரணித்த 11 பேரில் 7 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 3 பேரின் பிரேதப் பரிசோதனைகள் இன்று நடத்தப்படுமென காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிக் காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

நால்வரின் பிரேதப் பரிசோதனைகள் இதுவரை நடைபெற்று முடிந்துள்ளதாகவும் எஞ்சியவர்களை அடையாளம் காணும்பொருட்டு டி.என்.ஏ. பரிசோதனை அல்லது கைரேகைப் பரிசோதனை நடத்தப்படுமெனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.