இன்றுமுதல் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!
பொறுப்பற்ற வாகன சாரதிகள் மற்றும் வேக வரம்புகளை மீறும் நபர்களை அடையாளம் காண இன்று முதல் சிறப்பு நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுகளுக்காக நேற்று மாலை 24 மோட்டார் சைக்கிள்கள் மிரிஹானா பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கிம்புலா எல பகுதியில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் மோட்டார் சைக்கிள் பந்தயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது போக்குவரத்து விதி முறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக சாரதிகள் மீது குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதிகள் வீதி விதிமுறைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் வேக வரம்புகளை இரவு வேளையில் பின்பற்றுவதில்லை என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
ஆகவே தவறு செய்தவர்கள் மற்றும் ஒழுக்கமற்ற சாரதிகள் அனைவருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.