மேலும் சில இலங்கையர்கள் நாடு திரும்பினர்
மத்திய கிழக்கு நாடுகள், அவுஸ்ரேலியா மற்றும் ஜப்பானில் இருந்து இலங்கையர் 298 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதன்படி துபாயிலிருந்து வந்த விமானங்களில் 169 பேரும், கட்டாரிலிருந்து 41 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 38 பேரும், ஜப்பானிலிருந்து 50 பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.