பாரிய சேதத்தை ஏற்படுத்திய மஹர சிறைச்சாலையின் பதற்ற நிலை..!
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக, 100 மில்லியன் ரூபாய் அளவில் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சிறைச்சாலைகள் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது
இந்த தீயினால் பல்வேறு ஆவணங்களும் நாசமடைந்துள்ளன.
இழப்புக்கணிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதேநேரம் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த 11 பேரில் இரண்டு பேரின் சடலங்கள் இன்னும் ராகம வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் 9 பேர் கொவிட்19 நோயாளர்கள் என்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.
அவர்களது சரீரத்தை எவ்வாறு அடக்கம் செய்வது என்பது தொடர்பான தீர்மானம் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.
இதேவேளை இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒரு கைதி, வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.