
மொரட்டுவ கோர விபத்து! கர்ப்பிணிப் பெண்ணும் பரிதாபமாக உயிரிழப்பு
மொரட்டுவ - எகொடஉயன பகுதியில் மோசஸ் லேன் அருகே இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த கர்ப்பிணிப் பெண்ணும் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் தனது ஒரு வயது மற்றும் 7 வயதுடைய குழந்தைகளை இழந்திருந்த கர்ப்பிணித்தாய் கருவிலுள்ள குழந்தையையும் இழந்திருந்தார்.
இந்த நிலையில் தாயும் இன்று காலை உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட 20 வயது இளைஞனுக்கு 18 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.