லொத்தர் சபையின் கொள்முதல் செயற்பாடுகளில் இடம்பெற்ற தலையீடுகள் தொடர்பில் கோப் குழுவில் தகவல்
2017ஆம் ஆண்டில் அப்போதைய வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட தேசிய லொத்தர் சபையின் கொள்முதல் செயற்பாடுகளில், விடயத்துக்கு பொறுப்பான அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்கவின் கடுமையான தலையீடுகள் காணப்பட்டதாக அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான கோப் குழுவில் தகவல் வெளிப்பட்டுள்ளது.
கடந்த 04ஆம் திகதி அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கூடியபோது தேசிய லொத்தர் சபையின் கொள்முதல் தொடர்பான விடயம் கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போது இந்தத் தகவல் வெளிப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய 2017ஆம் ஆண்டு சுரண்டல் லொத்தர் சீட்டுக்களை அச்சிடுவதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டு கொள்முதல் நடைமுறைகள் தயார்ப்படுத்தப்பட்டிருந்த போதும், அப்போதிருந்த வெளிவிவகார அமைச்சரின் தேவைக்கு ஏற்ப அமைச்சரவைத் தீர்மானத்தின் கீழ் விலைமனுக் கோரல் நிறுத்தப்பட்டிருந்தது.
அவ்வாறு நிறுத்தப்பட்டமை முறையற்றது என அப்போதிருந்த நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியிருந்தபோதும், அமைச்சரவைத் தீர்மானத்தின் கீழ் இது நிறுத்தப்பட்டிருந்தது.
இதற்கமைய, சுரண்டல் லொத்தர் சீட்டுக்களை அச்சிடுவதற்கான ஒப்பந்தம் அக்வா ஃப்ளெக்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்படுவது இடைநிறுத்தப்பட்டது.
செல்வாக்கின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவுக்கு அமைய லொத்தர் சீட்டுக்களை அச்சடிக்கும் ஒப்பந்தம் பிரின்ட் கெயார் செக்குவர் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டமையையும் கோப் குழு கவனத்திருந்தது.
அமைச்சரவை முடிவு தேசிய லொத்தர் சபைக்குப் பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தியிருப்பதுடன், இதனால் 2020 வரை புதிய விலைமனுக் கோரலுக்கு முடியாதிருப்பதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், 2017, 2018, 2019 ஆண்டுகளுக்கான தேசிய லொத்தர் சபையின் வருடாந்த அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதும் இங்கு தெரியவந்தது.
இது குறித்து ஆராய்ந்து விரைவில் சம்பந்தப்பட்ட அறிக்கைகளை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறும் கோப் குழு பணிப்புரை விடுத்தது.
பல ஆண்டுகளாக தேசிய லொத்தர் சபையின் நிர்வாகப் பதவிகளில் வெற்றிடங்கள் காணப்படுவது குறித்தும் கோப் குழு கவனம் செலுத்தியிருந்ததுடன், இவற்றை உரிய முறையின் கீழ் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
லொத்தர் சீட்டு அச்சிடுவதில் 'கட்டாயம் ஆகக் குறைந்தது 03 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்' என்ற விடயம் 2016 ஆம் ஆண்டு கொள்முதலுக்கான அடிப்படையிலிருந்து நீக்கப்பட்டு, 2018ஆம் ஆண்டு 'சில அனுபவம் கட்டாயம்' என்ற விடயம் சேர்க்கப்பட்டமை குறித்தும் கோப் குழு கவனம் செலுத்தியிருந்தது
அத்துடன், போட்டியான நிறுவனத்துக்கு லொத்தர் சீட்டுக்களை அச்சிட்டு விநியோகித்தால் அவ்வாறான நிறுவனம் தேசிய லொத்தர் சபையின் சீட்டுக்களை அச்சிடுவதற்கு தெரிவுசெய்யப்படமாட்டாது என்ற விடயம் 2016 கொள்முதல் நடைமுறையிலிருந்து நீக்கப்பட்டபோதும் 2018 மற்றும் 2020 இல் இந்த விடயம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது
தேசிய லொத்தர் சபையானது லொத்தர் சீட்டுக்களை அச்சிடுவதற்காக 2016ஆம் ஆண்டு 609 மில்லியன் ரூபாய்களையும், 2017 ஆம் ஆண்டு 453 மில்லியன் ரூபாய்களையும், 2018 ஆம் ஆண்டு 506 மில்லியன் ரூபாய்களையும், 2019 ஆம் ஆண்டு 530 மில்லியன் ரூபாய்களுமாகப் பெருந்தொகை பணத்தை செலவிட்டுள்ளது
எனவே உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்றும், லொத்தர் சீட்டுக்களை அச்சிடுவது ஒழுங்குபடுத்தப்படுவது அவசியம் என்றும் கோப் குழு பணிப்புரை விடுத்தது.
ஊழடழஅடிழ யுiசிழசவ ளுரிநச னுசயற சீட்டிழுப்பில் பெறப்படவேண்டிய 26,000 அமெரிக்க டொலர் நிதி இன்னமும் நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லையென்றும், னுழடடநச குழசவரநெ என்ற பெயரில் லொத்தர் சீட்டிழுப்பு வெளிப்படை அற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் இதனை ஒழுங்குமுறைப்படுத்துமாறும் கோப் குழு தெரிவித்துள்ளது.