மூன்று உயிர்களை காவு வாங்கிய கோர விபத்து! 20 வயது இளைஞனின் காதலி விடுத்துள்ள செய்தி

மூன்று உயிர்களை காவு வாங்கிய கோர விபத்து! 20 வயது இளைஞனின் காதலி விடுத்துள்ள செய்தி

மொரட்டுவ - எகொடஉயன பகுதியில் மோசஸ் லேன் அருகே இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரு வயது மற்றும் 7 வயதுடைய சகோதரிகள் உயிரிழந்ததுடன், ஒரு கர்ப்பித்தாய் பலத்த காயமடைந்துள்ளார்.

இந்த விபத்துக்கு காரணமான இளைஞன் தொடர்பில் தற்போது பல செய்திகள் வெளிவந்துள்ளன.

குறித்த 20 வயதுடைய லஹிரு பெர்னாண்டோ என்ற இளைஞன் சமூக ஊடகங்களில் தனது பயணம் தொடர்பான வீடியோவை பதிவிட்டு பந்தயம் கட்டி பணம் ஈட்டி வருவது தெரியவந்துள்ளது.

இவருக்கு ஒவ்வொரு இரவும் நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டும் பழக்கம் உள்ளது.

இதுபோன்ற சந்தர்ப்பங்களின் வீடியோக்களை பதிவுசெய்து தனது சமூக ஊடக கணக்குகளில் பகிர்ந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன கருத்து தெரிவிக்கையில்,

வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய குறித்த சந்தேகநபர் இதறகு முன்னர் ஏற்படுத்திய விபத்துக்கும் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

இதற்கிடையில், குறித்த இளைஞனின் காதலி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, ​​

இரண்டு குழந்தைகளை கார் விபத்தில் கொன்ற தனது காதலனுக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்படக்கூடாது என்றும், குடும்பத்திற்கு நிதி உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார்.

எனினும் இந்த விபத்தில் கர்ப்பிணித் தாயாக இருந்த அந்தப் பெண், தனது குழந்தையை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.