விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுமா..? நாளை விசேட கலந்துரையாடல்

விமான நிலையம் மீண்டும் திறக்கப்படுமா..? நாளை விசேட கலந்துரையாடல்

விமான நிலையத்தை திறப்பது மற்றும் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை (07) சுகாதார அமைச்சில் இடம்பெறவுள்ளது.

கொரோனா இரண்டாவது அலைக்கு பின்னர் விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சுடன் இணைந்ததாக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த குழுவின் ஏற்பாட்டிலேயே இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.