கண்டி - திகன பிரதேசத்தில் இன்றும் சிறிய அளவான நில அதிர்வு

கண்டி - திகன பிரதேசத்தில் இன்றும் சிறிய அளவான நில அதிர்வு

கண்டி - திகன பிரதேசத்தில் இன்றும் சிறிய அளவான நில அதிர்வு ஒன்று பதிவாகி இருந்தமையை, புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணிமனை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை 5.42 அளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இது ரிக்டர் மானியில் 2 மெக்னிரியூட் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் கடந்தமாதம் 18ம் திகதியும் 2 மெக்னிரியுட் அளவில் நில அதிர்வு ஒன்று இந்த பிரதேசத்தில் பதிவாகி இருந்ததுடன், அதற்கு முன்னரும் அந்த பகுதியில் பல சந்தர்ப்பங்களில் நில அதிர்வுகள் பதிவாகி இருந்தன.

நிலத்துக்கு அடியில் உள்ள சுண்ணக்கற்களின் நகர்வுகளால் இந்த நிலஅதிர்வுகள் ஏற்பட்டிருந்ததாக, இலங்கை புவி சரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணிமனையின் அறிக்கையில் அதற்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.