நேற்று கொரோனா தொற்றாளர்கள் பதிவான பிரதேசங்கள்!

நேற்று கொரோனா தொற்றாளர்கள் பதிவான பிரதேசங்கள்!

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 669 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 27,224 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 204 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 111 பேரும், கண்டி மாவட்டத்தை சேர்ந்த 170 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 23,670 ஆக அதிகரித்துள்ளது .

கடந்த 24 மணித்தியாலங்களில் 652 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,090 ஆக உயர்வடைந்துள்ளது. தொடர்ந்தும் 7,001 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகினறனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.