பிரமுகர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 44 பேருக்கு கொரோனா!
வி ஐ பி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 44 பேர் உட்பட 1277 பொலிஸாருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இவர்களில் 925 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
எனினும் 352 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதிலும் 265 பேர் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர்களாவர்.
நாட்டிலுள்ள 85 பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பொலிஸ் கொவிட் கொத்தணி விபரம்
பொலிஸ் நிலையம் எண்ணிக்கை
கோட்டை 162
பொரள்ளை 107
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு 68
வாழைத்தோட்டம் 76
கிரான்பாஸ் 39
மருதானை 23
புறக்கோட்டை 20
குற்றப் புலனாய்வு திணைக்களம் 15
சுற்றாடல் பொலிஸ் பிரிவு 12
பேராதனை 08
கறுவாத்தோட்டம் 31