தாழமுக்கம் கரையைக் கடக்கும் வரை வட மாகாணத்தில் மழை பெய்யும்!

தாழமுக்கம் கரையைக் கடக்கும் வரை வட மாகாணத்தில் மழை பெய்யும்!

வடக்கு மாகாணத்தினூடாக கடந்து சென்ற புரெவிப் புயலானது வலுக்குறைந்து தீவிர தாழமுக்கமாக மன்னார் வளைகுடாக் கடற்பகுதியில் கடந்த 48 மணி நேரமாக ஒரே இடத்திலேயே நிலைகொண்டுள்ளது என புவியியல் துறை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது அடுத்த 16 மணி நேரத்துக்கும் அதே இடத்திலேயே நிலைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் இந்த தாழமுக்கம் கரையைக் கடக்கும் வரை வடக்கு மாகாணத்தில் மழை பெய்யும்.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டமும் ( தீவுப்பகுதிகள் உட்பட) மன்னார் மாவட்டமும் கனமழைக்கான வாய்ப்புக்களை கொண்டிருக்கின்றன.

இன்றும் நாளை அதிகாலையும் யாழ். மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புண்டு. சிலவேளை அதற்கு முன்பாக இத்தாழமுக்கம் கரையைக் கடந்தால் வடக்கில் படிப்படியாக மழை குறையும்.

ஆனாலும் தற்போதைய நிலையின் படி தாழமுக்கம் அதே இடத்தில் தொடரவே வாய்ப்புண்டு. ஏற்கெனவே மண், நீர் நிரம்பிய நிலையில் காணப்படுவதால் 50 மி.மீ. மழை கிடைத்தாலே வெள்ள அனர்த்தம் ஏற்பட வாய்ப்புண்டு.

எனவே, மக்கள் தொடர்ந்து அவதானமாக இருப்பது அவசியம் எனத் தெரிவித்தார்.