கொழும்பில் முன்னணி ஊடக நிறுவனமொன்றில் அறுவருக்கு கொரோனா
கொழும்பு நகரில் அமைந்துள்ள முன்னணி பத்திரிகை நிறுவனமொன்றில் அறுவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பத்திரிகையின் சிங்கள மற்றும் ஆங்கில பதிப்புக்களில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏனையவர்கள் குறித்த நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் தொழில்நுட்ப பிரிவில் கடமையாற்றுபவர்கள் என குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை குறித்த பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர் ஒருவர் கடந்த மாதம் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது