கொவிட்-19 தொற்று தொடர்ந்தும் கட்டுப்படுத்தக்கூடிய நிலையில்
கொவிட்-19 தொற்று பரவல் தொடர்ந்தும் கட்டுப்படுத்தக்கூடிய நிலையிலேயே இருப்பதாக தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளரான விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்தும் கட்டுப்படுத்த அரசாங்கத்தின் முயற்சிகளோடு மக்களின் ஒத்துழைப்பும் தேவை. குறிப்பாக சுகாதார வழிகாடடல்களை பின்பற்றுவது அவசியம் எனவும் டொக்டர் கூறினார்.
அதேவேளை, இதுவரையில் கொவிட்-19 தொடர்பான எந்தவொரு தடுப்பு மருந்தையும் உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகரிக்கவில்லை. பரிசோதனை மட்டத்திலுள்ள தடுப்புமருந்து பற்றி விரைவில் தீர்மானம் எட்டப்படும் என தொற்றுநோயியல் பணிப்பாளர் மேலும் கூறினார்.