COVID-19 காரணமாக இலங்கையில் உயிரிழந்த முதல் மருத்துவர்!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
COVID 19 காரணமாக இலங்கையில் உயிரிழந்த முதல் மருத்துவர் இவர் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.டி.எச் வைத்தியசாலை மற்றும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளன.
அரசு சேவையில் இருந்து ஓய்வு பெற்ற குறித்த வைத்தியர் பின்னர் ஸ்லேவ் ஐலேன்ட் மற்றும் மட்டக்குளிய பகுதியில் தனியார் கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
அவருக்கு பிற உடல்நல சிக்கல்களும் இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த மரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.