எகொடஉயன விபத்து...! சந்தேக நபருக்கு 18ஆம் திகதி வரை விளக்கமறியல்
உந்துருளியை மோதி ஒரு வயது குழந்தையும், 7 வயதான சிறுமியும் உயிரிழக்க காரணமாக அமைந்த உந்துருளி சாரதி ஒருவர் எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த அனர்த்தம் நேற்றிரவு மொரட்டுவை - எகொடஉயன பிரதேசத்தில் இடம்பெற்றது.
கர்ப்பிணித் தாய் ஒருவர் தமது ஒரு வயது குழந்தை மற்றும் 7 வயதான மகளுடன் பாதையை கடக்க முற்பட்டபோது, உந்துருளி ஒன்று அவர்களை மோதியது.
இதில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தையும், மகளும் உயிரிழந்தனர்
தாய் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக உந்துருளி சாரதி கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.