வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தோருக்கு சிறப்பு செய்தி
கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தோருக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வருகை தருவோருக்கு விமான நிலையங்களில் வழங்கப்படும் Duty Free பொருட்களை தற்போது வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பயணிகளுக்கு அந்த சலுகையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை முடிவடைந்து ஒரு மாதத்திற்குள் விமான நிலையத்திற்கு வந்து அங்குள்ள கடைகளில் Duty Free பொருட்களை வாங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.