தனிமைப்படுத்தப்பட்ட இடங்களிலுள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை!
நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு நிவாரண காலம் வழங்கப்பட்டுள்ளது என நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கரத்துத் தெரிவிக்கையில்,
நீர் கட்டணம் செலுத்தப்படாத நிலையில், நீர் விநியோகத்தடை ஏற்படுத்தப்படமாட்டாது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல்வேறு பிரதேசங்கள் உள்ளடங்களாக சில நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதிகளில் வசிப்பவர்களினால் நீர் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.