மொரட்டுவ விபத்து - மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் விளக்கமறியலில்

மொரட்டுவ விபத்து - மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் விளக்கமறியலில்

மொரட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மொரட்டுவ நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மொரட்டுவ, எகொட உயன பாதாசாரிகள் கடவையில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதுடன் கர்ப்பிணி தாயார் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் ஒரு வயது மற்றும் 7 வயதுடைய சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் தாயாரே இவ்வாறு கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதாசாரிகள் கடவையில் பாதையை கடக்க முற்பட்டவர்களை மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.