அதிகரித்து வரும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை..!
இலங்கையில் கொவிட்19 நோயில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20ஆயிரத்தை கடந்துள்ளது.
இன்றையதினம் 652 பேர் நோய்த்தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்திருப்பதாக, தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த நோயில் இருந்து குணமடைந்து சிகிச்சை மையங்களில் இருந்து வெளியேறியோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 90ஆக உயர்வடைந்துள்ளது.
தற்போது 6ஆயிரத்து 339 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மொத்தமாக 26 ஆயிரத்து 559 பேருக்கு இலங்கையில் இதுவரையில் கொவிட்19 நோய்த்தொற்று செய்யப்பட்டுள்ளது.