உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் இருவர் கைது

மீடியாகொட மற்றும் பரயனாலன்குளம் பகுதிகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, ஹிக்கடுவை பகுதியில் வசித்து வரும் 27 வயதுடைய சந்தேக நபர் உள்நாட்டு துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.

மேலும், 21 வயதுடைய மற்றொரு நபர் பரயனாலன்குளம் பகுதியில் வைத்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.